செய்திகள்
கவர்னர் ஜெகதீப் தாங்கர்

போலீஸ் மாநிலம் நடத்தும் மம்தா: கவர்னர் தாங்கர் குற்றச்சாட்டு

Published On 2020-05-05 03:21 GMT   |   Update On 2020-05-05 03:21 GMT
மேற்கு வங்காளம், துரதிருஷ்டவசமாக, ஒரு போலீஸ் மாநிலமாக உருவெடுத்து வருகிறது என்று கவர்னர் ஜெகதீப் தாங்கர் கூறியுள்ளார்.
கொல்கத்தா :

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அம்மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளம், துரதிருஷ்டவசமாக, ஒரு போலீஸ் மாநிலமாக உருவெடுத்து வருகிறது. ஆளும்கட்சிக்கு பிடிக்காத விஷயங்களை யாராவது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால், அவர்களின் வீட்டு கதவை போலீஸ் தட்டுகிறது. இது மம்தாவின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது.

ஜனநாயகத்தில் இதற்கு இடமில்லை. மம்தா இப்போதாவது யதார்த்தத்தை புரிந்துகொண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதிகாரத்தை பறிப்பவர் யார்? அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம் யார்? என்பதெல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News