செய்திகள்
யுபிஎஸ்சி அலுவலகம்

சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைப்பு- மே 20க்கு பிறகு புதிய தேதி அறிவிப்பு

Published On 2020-05-04 08:32 GMT   |   Update On 2020-05-04 08:32 GMT
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் நடக்கவிருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு மே 17-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

அவ்வகையில், மே 31ம் தேதி நடக்கவிருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து மே 20ம் தேதிக்கு பிறகு உள்ள சூழ்நிலையை ஆராய்ந்து, அதன்பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தும் புதிய தேதியை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். 

தேர்வுக்காக விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அடுத்த வாரம் யுபிஎஸ்சி  வெளியிட இருந்தது. தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஹாட் டிக்கெட் நடைமுறையை  ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News