செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் மே இறுதிவரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க நிபுணர்கள் அறிவுரை - மம்தா பானர்ஜி

Published On 2020-04-30 02:02 GMT   |   Update On 2020-04-30 02:02 GMT
மேற்கு வங்காளத்தில் மே மாத இறுதிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க நிபுணர்கள் அறிவுறுத்தி இருப்பதாக மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா அச்சுறுத்தல் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலான நாடுகள், மே மாத இறுதிவரையும், ஜூன் மாதம் முதல் வாரம் வரையும் ஊரடங்கை நீட்டித்துள்ளன. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை, மே மாத இறுதிவரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர்களும், டாக்டர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.

மே மாத இறுதிக்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கலாம். ஆனால், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழைக்காலத்தில் மீண்டும் தலையெடுக்கக் கூடும்.

இருப்பினும், மேற்கு வங்காளத்தில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பசுமை மண்டலங்களில், மத்திய அரசு உத்தரவுப்படி, தனி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகளை திறக்கலாம்.  இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Tags:    

Similar News