செய்திகள்
மத்திய அரசு

ஐடி ஊழியர்கள் ஜூலை 31-ந் தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம்- மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-04-29 10:37 GMT   |   Update On 2020-04-29 10:37 GMT
ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்கள் ஜூலை 31-ந் தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே மாதம் 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும் அனைத்து ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் ஏப்ரல் 30-ந்தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த நடைமுறையை ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்புத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் வீடியோ கான்பரசிங் மூலம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும் பாணி மாறிவிட்டது. உலகம் முழுவதும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்கிறார்கள்.

நம் நாட்டிலும் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற இந்த மாதம் இறுதி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுகிறது. ஐடி மற்றும் பி.பி.ஓ. ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

சுகாதார சேவை ஆன்லைன் சுகாதார சேவைகளை தென் மாநிலங்கள் சிறப்பாக கையாளுகின்றன. மற்ற மாநிலங்கள் இதனை பின்பற்ற வேண்டும்.

ஊரடங்குக்கு பின் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தை கருத்தில்கொண்டு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க குழு அமைக்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Tags:    

Similar News