செய்திகள்
கோப்பு படம்

கொரோனா சோதனை கருவிகளை இந்தியாவே தயாரிக்கும் - மத்திய அரசு தகவல்

Published On 2020-04-29 05:00 GMT   |   Update On 2020-04-29 05:00 GMT
பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளையும், ஆன்டிபாடி பரிசோதனை கருவிகளையும் இந்தியாவே தயாரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளையும், ஆன்டிபாடி பரிசோதனை கருவிகளையும் இந்தியாவே தயாரிக்கும். அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த மாதம் உற்பத்தி தொடங்கும். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்துவதே நமது இலக்கு, மே 31-ந் தேதிக்குள் நிறைவேறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News