செய்திகள்
மரணம்

மும்பையில் மேலும் ஒரு போலீஸ்காரர் கொரோனாவுக்கு பலி

Published On 2020-04-28 04:55 GMT   |   Update On 2020-04-28 04:55 GMT
மும்பையில் மேலும் ஒரு போலீஸ்காரர் கொரோனாவுக்கு பலி ஆனார். 3 நாட்களில் 3-வதாக போலீஸ்காரர் நோய் தொற்றுக்கு உயிரிழந்த சம்பவம் போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:

மும்பையில் அசுர வேகத்தில் பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா போலீஸ்காரர்களையும் பாடாய்படுத்தி வருகிறது. இதில் மும்பை குர்லா கமனி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்த சிவாஜி நாராயண்(வயது56) என்ற போலீஸ்காரரருக்கு கடந்த 21-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் போலீஸ்காரர் சிவாஜி நாராயண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனாவுக்கு பலியான போலீஸ்காரர் குர்லா போக்குவரத்து பிரிவில் வேலை பார்த்தவர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர்.

மும்பையில் ஏற்கனவே போலீஸ் ஏட்டு சந்திரகாந்த் கனபத் (வயது57), போலீஸ்காரர் சந்தீப் சுர்வே(52) ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.

3 நாட்களில் 3-வதாக போலீஸ்காரர் நோய் தொற்றுக்கு உயிரிழந்த சம்பவம் போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மாநில அரசு கொரோனாவுக்கு உயிரிழந்த போலீசாரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளது.
Tags:    

Similar News