செய்திகள்
முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் சிறுமிகளை மீட்க உதவ வேண்டும்- எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கோரிக்கை

Published On 2020-04-08 05:30 GMT   |   Update On 2020-04-08 05:30 GMT
திருப்பூரில் கொத்தடிமைகளாக இருக்கும் ஜார்கண்ட் சிறுமிகளை மீட்க உதவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஞ்சி:

திருப்பூரில் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமிகள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களை மீட்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென்றும் அந்த மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் ஹேமந்த் சோரன் கூறியிருப்பதாவது:-

ஜார்கண்ட் மாநிலம் சைபாசா நகரை சேர்ந்த 200 சிறுமிகள் திருப்பூரில் சிக்கியுள்ளனர். அவர்கள் ஒரு ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் மனிதாபிமானமற்ற சித்ரவதைக்கு அவர்கள் ஆளாக்கப்படுகின்றனர். எனவே அவர்களை மீட்க தமிழக அரசும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News