செய்திகள்
சரத்பவார்

டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்?: சரத்பவார் கேள்வி

Published On 2020-04-07 03:11 GMT   |   Update On 2020-04-07 03:11 GMT
டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை :

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் 400 பேருக்கு கொரோனா இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ‘‘மராட்டியத்தில் இதுபோன்ற மாநாடு நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கும் அனுமதி மறுத்து உள்ளனர். இந்தநிலையில் டெல்லியில் மாநாடு நடத்த ஏன் அனுமதி மறுக்கப்படவில்லை?. டெல்லியில் மாநாடு நடத்த அனுமதி கொடுத்தது யார்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த பிரச்சினையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறி வைப்பது சரியல்ல எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News