செய்திகள்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிரா- கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 537 ஆக அதிகரிப்பு

Published On 2020-04-04 11:30 GMT   |   Update On 2020-04-04 11:30 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.

மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா தொற்று நுழைந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

மகாராஷ்டிரா முழுவதும் மேலும் 67 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில்  மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 50 பேர் சிகிச்சையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என அம்மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News