செய்திகள்
இஸ்ரோ

கொரோனாவை தடுக்க பிரதமர் நிவாரண நிதிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி நிதி

Published On 2020-04-03 09:53 GMT   |   Update On 2020-04-03 09:53 GMT
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு இஸ்ரோ நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  பல்வேறு நாடுகள் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரின் நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள், பெரிய கம்பெனிகள் பல தொடர்ந்து  நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இஸ்ரோ நிறுவனம் சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியுதவி அளிக்க உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News