செய்திகள்
ஜோத்பூரில் வந்திறங்கிய 275 இந்தியர்கள்

ஈரானில் சிக்கித் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்

Published On 2020-03-29 08:25 GMT   |   Update On 2020-03-29 08:25 GMT
ஈரானில் சிக்கித் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று ராஜஸ்தான் அழைத்து வரப்பட்டனர்.
ஜெய்ப்பூர்:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வெகு வேகமாகப் பரவி வருகிறது. ஈரானிலும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.  
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவிலான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் காரணமாக ஈரானில் சுமார் 600 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருவதாக செய்திகள் வெளியாகின. 

இதற்கிடையே, மத்திய அரசின் ஏற்பாட்டின்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 277 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் ராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 275 இந்தியர்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் முதல்கட்ட பரிசோதனைக்குப் பிறகு அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாம் அழைத்து செல்லப்பட்டனர். 
Tags:    

Similar News