செய்திகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்கக்கோரி மனு - அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2020-03-12 22:32 GMT   |   Update On 2020-03-12 22:32 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மோகன்பாபு அகர்வால் என்ற வக்கீல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.



இந்த மனு நீதிபதிகள் லலீத் மற்றும் அனிரூத்தா போஸ் ஆகியோரை கொண்ட விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டியதற்கான அவசியம் என்ன என்பதை மனுதாரர் குறிப்பிடாததால் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் விடுமுறைக்கு பிறகு 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் திறக்கப்படுவதால் அன்றைய தினம் வழக்கமான அமர்வு முன்பு வழக்கை விசாரிக்க மனுதாரர் கோரிக்கை வைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News