செய்திகள்
பெண் விமானிகளுக்கு நாரிசக்தி புரஷ்கார்

சாதனை படைத்த பெண்களுக்கு நாரிசக்தி புரஸ்கார் விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்

Published On 2020-03-08 08:01 GMT   |   Update On 2020-03-08 08:01 GMT
சர்வதேச மகளிர் தினமான இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாரிசக்தி புரஸ்கார் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக போராடிய தன்னார்வ அமைப்புகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக நாரி சக்தி புரஸ்கார் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
 
அவ்வகையில், டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாரிசக்தி புரஷ்கார் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.



இந்திய விமானப்படையில் முதன்முதலாக போர் விமானங்களை இயக்கிய பெண் விமானிகளான மோஹனா ஜிட்டர்வால், அவானி சதுர்வேதி, பாவனா காந்த், பீகார் மாநிலத்தில் கிராமப்புற பெண்களிடையே காளான் வளர்ப்பு தொழிலை பிரபலப்படுத்தி அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு எய்திட வழிவகுத்த பினா தேவி மற்றும் 103 வயது மூதாட்டி மான் கவுர் உள்ளிட்டோர் ஜனாதிபதி கையால் இன்று நாரிசக்தி புரஸ்கார் விருதுகளை பெற்றனர்.
Tags:    

Similar News