செய்திகள்
பச்சிளம் குழந்தை (கோப்பு படம்)

வறுமையால் பச்சிளம் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற திரிபுரா தம்பதி

Published On 2020-03-03 08:07 GMT   |   Update On 2020-03-03 08:07 GMT
திரிபுராவைச் சேர்ந்த ஒரு தம்பதி, வறுமை காரணமாக தங்கள் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற அவலம் நடந்துள்ளது.
அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில் வறுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு விற்கும் நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. 

இந்நிலையில், உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தங்கள் ஆண் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்றுள்ளனர். ஜனவரி 13-ம் தேதி பிறந்த அந்த குழந்தையை, பிப்ரவரி 14-ம் தேதி விற்றுள்ளனர். இதுபற்றி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரியவந்ததும், விசாரணை நடத்தி நேற்று அந்த குழந்தையை மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அரசு விரிவான அறிக்கை கேட்டுள்ளது. 

ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்த நிலையில், 4வதாக பிறந்த ஆண் குழந்தையை அந்த தம்பதியர் விற்றுள்ளனர். 

வறுமை காரணமாக அந்த தம்பதியர் குழந்தையை விற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், வறுமை என்பது உண்மையான காரணமாக இருக்காது என்றும், வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும்  மாநில கல்வி மந்திரி ரத்தன் லால் நாத் கூறியுள்ளார். பிழைப்புக்காக குழந்தையை பெற்றோர் விற்பது போன்ற சூழ்நிலை திரிபுராவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News