செய்திகள்
500 ரூபாய் நோட்டு

2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஏ.டி.எம்.களில் அதிக 500 ரூபாய் நோட்டுகள் - வங்கிகள் நடவடிக்கை

Published On 2020-02-26 23:48 GMT   |   Update On 2020-02-26 23:48 GMT
ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் பணிகளை வங்கிகள் தொடங்கி உள்ளன.
புதுடெல்லி:

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மையங்களில் சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பது என இந்தியன் வங்கி உள்பட சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மக்களுக்கு சிரமமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இப்படி ஒரு அறிவுறுத்தலை வங்கிகளுக்கு வழங்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். எனினும் இது தொடர்பாக தன்னிச்சையாகவே இந்த முடிவை பெரும்பாலான வங்கிகள் எடுத்திருந்தன.

அதன்படி தற்போது ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் பணிகளை வங்கிகள் தொடங்கி உள்ளன. ஒருசில வங்கிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், பிற வங்கிகளும் விரைவில் இந்த நடவடிக்கையை தொடங்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News