செய்திகள்
அமித் ஷா

டெல்லியில் தொடரும் வன்முறை - அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

Published On 2020-02-25 06:02 GMT   |   Update On 2020-02-25 11:25 GMT
டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, தலைநகரின் நிலவரம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாஜ்பூர் உள்ளிட்ட சில இடங்களில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து டெல்லி வடகிழக்கு பகுதியின் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

இந்நிலையில், டெல்லியின் நிலவரம் குறித்து விவாதிக்க, டெல்லி கவர்னர், முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்குபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News