செய்திகள்
முகே‌‌ஷ் அம்பானி

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும்: முகே‌‌ஷ் அம்பானி

Published On 2020-02-25 02:07 GMT   |   Update On 2020-02-25 02:07 GMT
இன்னும் 10 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும் என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகே‌‌ஷ் அம்பானி கூறியுள்ளார்.
மும்பை :

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று மும்பையில் அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகே‌‌ஷ் அம்பானி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

டிஜிட்டல் உலகில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. டேட்டா பயன்பாடு, மிகவும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா, ஒரு இயக்கமாகவே மாறிவிட்டது. இன்னும் 10 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.

இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சிறிய தொழில் முனைவோரும் அம்பானி, பில்கேட்ஸ் போல் ஆகும் திறன் படைத்தவர்கள். அதுதான், இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News