செய்திகள்
யோகி - கோப்புப்படம்

300 ஆண்டுகளுக்கு முன் தியான நிலைக்கு சென்றவர் உயிருடன் உள்ளாரா?

Published On 2020-02-21 06:01 GMT   |   Update On 2020-02-21 06:01 GMT
300 ஆண்டுகளுக்கு முன் தியான நிலைக்கு சென்ற யோகி இன்றும் உயிருடன் இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



தடிப்புத் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்ட கஜகஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் இருப்பவர் ஒரு யோகி என்றும் இவர் 300 ஆண்டுகளுக்கு முன் தியான நிலைக்கு சென்றவர் எனவும் கூறப்படுகிறது. மேலும் கோவில் ஒன்றின் அருகில் குழி தோண்டிய போது, இவர் உயிருடன் மீட்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரல் வீடியோவில் மர்ம நபர் உடல் முழுக்க மண், இரத்தம் மற்றும் புண்களில் இருந்து திரவம் ஏதோ ஒழுகும் நிலையில் மருத்துவமனை படுக்கையில் படுக்கவைக்கப்பட்டு இருக்கிறார். இவரது வயது மற்றும் இதர விவரங்கள் எதுவும் அறியப்படவில்லை. எனினும், இவரது பெயரை கேட்கும் போது மர்ம நபர் தனது பெயர் அலெக்சாண்டர் என தெரிவிப்பதாக தெரிகிறது.



சமூக வலைதளங்களில் இந்த வீடியோ, "தமிழகத்தின் வள்ளியூர் பகுதி அருகே 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தரை காண்பது பெருமைக்குரிய விஷயம். வள்ளியூர் கோவிலை புதுப்பிக்கும் போது தோண்டப்பட்ட பள்ளத்தில் இவர் உயிருடன் மீட்கப்பட்டார். சித்தர் யோகாசன முறையில் அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும். ஓம் நமசிவாய" எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ளது.

வீடியோவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில், இந்த வீடியோ கஜகஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எடுத்தார் என தெரியவந்துள்ளது. வீடியோவில் இருப்பவரின் பெயர் அலெக்சாண்டர். இவருக்கு ஏற்பட்ட சரும நோய் பற்றி சக மருத்துவர்களிடம் தெரிவிக்க மருத்துவர் இந்த வீடியோவினை எடுத்திருக்கிறார். 

எனினும், வீடியோ தவறான தகவல்களுடன் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வைரல் வீடியோவில் இருப்பவர் யோகி இல்லை என்பது தெளிவாகி விட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News