செய்திகள்
மாயாவதி

ஒரேயடியாக உயர்த்துவதா? -கியாஸ் விலை உயர்வுக்கு மாயாவதி கண்டனம்

Published On 2020-02-12 10:45 GMT   |   Update On 2020-02-12 10:45 GMT
மானியமில்லாத கியாஸ் சிலிண்டர் விலையை சுமார் 150 ரூபாய் அளவுக்கு உயர்த்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி அன்று வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அவ்வகையில் நேற்று இரவு முதல் வீட்டு உபயோகத்திற்கான மானியம் அல்லாத கியாஸ் சிலிண்டர் (14 கிலோ) விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப இந்த விலை உயர்வு மாறுபடும். சென்னையில் 147 ரூபாய் உயர்ந்து, தற்போது ஒரு சிலிண்டர் ரூ.881-க்கு விற்கப்படுகிறது.


ஒரேயடியாக 147 ரூபாய் அளவுக்கு கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடுமையான நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ள ஏழை மற்றும் கடின உழைப்பாளர்களை, இந்த நடவடிக்கை கடுமையாக பாதிக்கும் என்றும் மாயாவதி கூறியுள்ளார். மக்கள் நலன் சார்ந்த அரசாக மத்திய அரசு செயல்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News