செய்திகள்
வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

டெல்லி சட்டசபை தேர்தல்- மதியம் வரை 15.57 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2020-02-08 08:08 GMT   |   Update On 2020-02-08 08:08 GMT
டெல்லி சட்டசபை தேர்தலில், மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போடும்படி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. முதல் இரண்டு மணி நேரத்தில் 4.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. 

வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. படிப்படியாக வாக்குப்பதிவும் அதிகரித்தது. முதல் மூன்று மணி நேரத்தில் 14.75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தனர். மதியம் 12 மணி நிலவரப்படி 15.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என அரசியல்  தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த தேர்தலில் மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.47 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Tags:    

Similar News