செய்திகள்
வாக்குப்பதிவு

டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2020-02-08 02:34 GMT   |   Update On 2020-02-08 02:34 GMT
70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டசபைக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டசபைக்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிற தேர்தல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.
Tags:    

Similar News