செய்திகள்
பிரதமர் மோடி

காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் மக்களை தூண்டி விடுகின்றன -மோடி

Published On 2020-02-06 09:41 GMT   |   Update On 2020-02-06 09:41 GMT
காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தூண்டி விடுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

இந்திய மக்கள் சர்க்காரை (அரசாங்கம்) மட்டும் மாற்றவில்லை. நாட்டை வழி நடத்தும் விதம் மாற்றப்படவேண்டும் எனவும் விரும்புகிறார்கள். பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு இந்தியா இனி காத்திருக்க முடியாது. எங்கள் நோக்கம், வேகமாக செயல்படுவது,  உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மை, உணர்திறன் மற்றும் தீர்வுகள் ஆகியவை.

ஐந்து ஆண்டுகளாக நாங்கள் செய்த வேலையை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் மீண்டும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதுவே எங்களை வேகமாக செயல்பட வைக்கிறது. 

நாங்கள் பழைய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளின் படி பணியாற்றியிருந்தால் அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ஒருபோதும் ரத்து செய்யப்பட்டிருக்காது. முத்தலாக் காரணமாக முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். காங்கிரசும், இடது சாரி கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தூண்டி விடுகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News