செய்திகள்
ஜிதேந்திர சிங்

மத்திய அரசில் 6¾ லட்சம் காலி பணியிடங்கள்

Published On 2020-02-06 03:08 GMT   |   Update On 2020-02-06 03:08 GMT
மத்திய அரசு துறைகளில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 காலி பணியிடங்கள் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

மத்திய அரசு துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி, அவற்றில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 காலி பணியிடங்கள் உள்ளன.



ராஜினாமா, மரணம், பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் காலி இடங்கள் உருவாகின்றன. இந்த காலியிடங்களை சம்பந்தப்பட்ட துறைகள் நிரப்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News