செய்திகள்
கோப்பு படம்

உலகில் காற்று மிகவும் மாசடைந்த முதல் 10 நகரங்களில் 7 நகரங்கள் இந்தியா... முதலிடமும் இந்தியாவுக்குத்தான்...

Published On 2020-01-24 17:48 GMT   |   Update On 2020-01-24 17:48 GMT
உலகில் மிகவும் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்திய நகரம் முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் முதல் 10 இடங்களில் 7 நகரங்களும் இந்தியாவில் தான் உள்ளது.
உலகின் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பல நகரங்களில் காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு மிகவும் மாசடைந்துவருகிறது. 

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, வாகனப்புகை என பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்துவருகிறது. 

இந்நிலையில், 'கிரின் பீஸ்’ மற்றும் 'ஐகியூ ஏர் ஏர்விசுவல்’ என்ற நிறுவனங்கள் உலகில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதில் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் புதுடெல்லியில் உள்ள குருகிராம் நகரம் மிகுந்த காற்று மாசடைந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.  

அதேபோல் மிகவும் மோசமாக காற்று பாதிக்கப்பட்டுள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

உலகில் காற்று மாசுபாடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் முதல் 7 இடங்களில் உள்ள இந்திய நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:-

குருகிராம் - புதுடெல்லி
ஃபரிடாபாத் - புதுடெல்லி
காசியாபாத் - புதுடெல்லி
பாஹ்வாடி - புதுடெல்லி
நோய்டா - புதுடெல்லி
பாட்னா - பீகார் 
லக்னோ - உத்தர பிரதேசம்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சராசரி காற்று மாசுபாட்டு அளவை காட்டிலும் கடந்த ஆண்டு புதுடெல்லியில் உள்ள குருகிராமில் 13 மடங்கு காற்று மாசடைந்திருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு அந்நகரில் காற்றுன் தரம் சற்று உயர்ந்திருப்பதாக அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News