செய்திகள்
கோப்பு படம்

மும்பை-ஆமதாபாத் இடையே ஓடும் தேஜஸ் ரெயில் தாமதமானதால் பயணிகளுக்கு தலா ரூ.100 இழப்பீடு

Published On 2020-01-23 07:55 GMT   |   Update On 2020-01-23 07:55 GMT
மும்பை-ஆமதாபாத் இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமானதால் பயணம் செய்த 630 பயணிகளுக்கு தலா ரூ.100 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
மும்பை:

மும்பை- ஆமதாபாத் இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று அந்த ரெயில் ஆமதாபாத்தில் இருந்த மும்பைக்கு வந்து கொண் டிருந்தது.

ஆமதாபாத்தில் நேற்று காலை 6.42 மணிக்கு அந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. நேற்று மதியம் 1.10 மணிக்கு அந்த ரெயில் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மதியம் 2.36 மணிக்குத்தான் அந்த ரெயில் மும்பை வந்து சேர்ந்தது. அந்த ரெயில் மும்பை புறநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப பழுதால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்தில் நின்றன.

இதனால் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மும்பை, சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வர முடியாமல் தாமதம் ஏற்பட்டு விட்டது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்து சேர்ந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கொள்கை வரையறை செய்யப்பட்டுள்ளது. ரெயில் 1 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.100 இழப்பீடும், 2 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.200 இழப்பீடும் கொடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மும்பை வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று பயணம் செய்த 630 பயணிகளுக்கும் தலா ரூ.100 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிவித்துள்ளது.

Tags:    

Similar News