செய்திகள்
இந்தியா (சித்தரிப்பு படம்)

ஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது

Published On 2020-01-22 12:14 GMT   |   Update On 2020-01-22 12:14 GMT
2019 ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் அமைப்பு பொருளாதார புலனாய்வு பிரிவு. இது கடந்த 2019ம் ஆண்டிற்கான உலகளாவிய ஜனநாயக குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த குறியீட்டிற்கான ஆய்வு, தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம், அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் சமூகத்தினரின் தனி உரிமைகள் ஆகிய ஐந்து சிறப்பம்சங்களின் அடிப்படையில் உலகின் 167 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது. 

கடந்த 2018ம் ஆண்டு 7.23 புள்ளிகளுடன் இருந்த இந்தியா தற்போது 6.90 புள்ளிகளுடன் 51வது இடத்தில் உள்ளது.  இந்தியாவின் ஜனநாயக பின்னடைவிற்கான முதன்மைக் காரணம், நாட்டில் சமூகத்தினரின் (சிவில்) உரிமைகள் சுரண்டப்படுதல் ஆகும் என அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியா பெற்றுள்ள புள்ளிகள்படி ‘குறைபாடுள்ள ஜனநாயகம்’ பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் 104-வது இடத்திலும், இலங்கை 69-வது இடத்திலும், வங்காளதேசம் 80-வது இடத்திலும் உள்ளன. சீனா 153-வது இடத்திலும், வடகொரியா கடைசி இடமான 167-வது இடத்திலும் (சர்வாதிகார ஆட்சிப் பிரிவு) உள்ளன.   

ஜனநாயக குறியீட்டு பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் பின்வருமாறு:-

1) நார்வே  2) ஐஸ்லாந்து  3) ஸ்வீடன்  4) நியூசிலாந்து  5) பின்லாந்து

6) அயர்லாந்து  7) டென்மார்க்  8) கனடா  9) ஆஸ்திரேலியா  

10) சுவிட்சர்லாந்து.
Tags:    

Similar News