செய்திகள்
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்

வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் - ப.சிதம்பரம் கருத்து

Published On 2020-01-14 22:52 GMT   |   Update On 2020-01-14 22:52 GMT
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தாலோ, வருவாய் இழப்பு ஏற்பட்டாலோ இளைஞர்களும், மாணவர்களும் வெகுண்டெழும் அபாயம் உள்ளது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுடெல்லி:

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார வீழ்ச்சி நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தாலோ, வருவாய் இழப்பு ஏற்பட்டாலோ இளைஞர்களும், மாணவர்களும் வெகுண்டெழும் அபாயம் உள்ளது. திறமையற்ற நிர்வாகத்தின் சுற்று முடிந்தது. மோடியின் அரசு ஜூலை 2014-ல் 7.39 சதவீத பணவீக்கத்துடன் தொடங்கியது. டிசம்பர் 2019-ல் இது 7.35 சதவீதமாக உள்ளது. உணவு பணவீக்கம் 14.12 சதவீதமாக உள்ளது. காய்கறிகள் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டியுள்ளது. பா.ஜனதா உறுதியளித்தபடி இது ‘நல்ல நாள்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News