செய்திகள்
ரன்தீப் சுர்ஜிவாலா

மாணவர்கள் மீதான தாக்குதல் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது - காங்கிரஸ்

Published On 2020-01-06 06:20 GMT   |   Update On 2020-01-06 08:19 GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பல்கலைக்கழகத்திற்குள் வன்முறை நடந்தது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். போலீசார் உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரசின் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதல் 90 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட நாஜிக்கள் தாக்குதலை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. இளைஞர்கள் குரலை எவ்வளவு அடக்குகிறீர்களோ, அவ்வளவு தைரியமாக அது மாறும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News