செய்திகள்
வைரல் புகைப்படம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இத்தனை ஆதரவா?

Published On 2020-01-02 06:46 GMT   |   Update On 2020-01-02 06:46 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் போராட்டம் வித்தியாசமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வரிசையில் தற்சமயம் வைரலாகும் வீடியோவில், பலர் காவி கொடிகளுடன் பேரணியாக செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் உள்ளவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி செல்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது.



வீடியோவை ஆய்வு செய்ததில், அதில் பயன்படுத்தப்படும் தலைப்பு தவறு என தெரியவந்துள்ளது. உண்மையில் வீடியோ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு பேரணியில் எடுக்கப்பட்டதில்லை. இந்த வீடியோவில் உள்ள பேரணி கர்நாடக மாநிலத்தில் ராம் நவமி ஷோபா யாத்திரையாகும்.

சமூக வலைத்தளங்களில் இந்த வைரல் வீடியோவினை பலர் பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோவிற்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News