செய்திகள்
சிபிஐ

துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியதில் முறைகேடு- 13 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

Published On 2019-12-30 11:04 GMT   |   Update On 2019-12-30 11:04 GMT
துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று 13 இடங்களில் சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. உயர் அதிகாரிகள் விதிகளை மீறி லைசென்ஸ் வழங்கியிருப்பதை, ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு கண்டறிந்தது. பின்னர், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஜம்மு காஷ்மீர், நொய்டா, குருகிராம் உள்பட 13 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியதில் தொடர்புடைய முன்னாள் கலெக்டர்களின் அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் மிகப்பெரிய சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News