செய்திகள்
அருண் ஜெட்லி சிலை

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி சிலையை திறந்து வைத்தார் நிதிஷ் குமார்

Published On 2019-12-28 10:28 GMT   |   Update On 2019-12-28 10:28 GMT
பீகார் மாநிலம் பாட்னாவில் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் சிலையை அம்மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று திறந்து வைத்தார்.
பாட்னா:

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு பா.ஜ.க.வுக்கு பேரிழப்பாய் அமைந்தது.

இதற்கிடையே, முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி சிலையை அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று திறந்து வைத்தார்.

அருண் ஜெட்லி பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல் மந்திரி சுஷில் மோடி மற்றும் அருண் ஜெட்லி குடும்பத்தினர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News