செய்திகள்
கோப்பு படம்

தொடர் விலை உயர்வு - சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இருப்பு வைக்கும் அளவு குறைப்பு

Published On 2019-12-09 16:09 GMT   |   Update On 2019-12-09 16:09 GMT
வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இருப்பு வைப்பதற்கான அளவு 5 மெட்ரிக் டன்னில் இருந்து 2 மெட்ரிக் டன்கள் என குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்த வெங்காயத்தின் விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன.

குறிப்பாக சில்லறை விற்பனையாளர்கள் 5 மெட்ரிக் டன்கள் அளவுக்கு வெங்காயத்தை இருப்பு வைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. 

தற்போது வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதை பதுக்கிவைத்து மூலம் விலை உயர்வை ஏற்படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


 
இந்நிலையில், நாட்டில் உள்ள சில்லறை வியாபாரிகள் வெங்காயம் இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த 5 மெட்ரிக் டன்கள் என்ற அளவை மத்திய அரசு குறைத்துள்ளது.

அதன்படி, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லறை வியாபாரிகள் 2 மெட்ரிக் டன்கள் அளவுக்கு மட்டுமே வெங்காய இருப்பு வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News