செய்திகள்
நிர்மலா சீதாராமன்

வெங்காய விலை உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் இப்படி கருத்து தெரிவித்தாரா?

Published On 2019-12-06 06:57 GMT   |   Update On 2019-12-06 06:57 GMT
நாட்டில் வெங்காய விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் கூறிய கருத்து என்ற தகவல் வைரலாகியுள்ளது.



நாட்டில் வெங்காயத்தின் விலை உய்ர்ந்து வரும் நிலையில், நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியிருக்கிறார். வெங்காய விலை உயர்வு பற்றிய கேள்விக்கு, தான் வெங்காயம் உண்பதில்லை என்பதால் தனக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியதாக சமூக வலைத்தளவாசிகள் கூறி வருகின்றனர்.

இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை கிண்டலடிக்கும் விதமாக ட்வீட் செய்திருக்கிறார். இது பற்றிய மற்ற ட்வீட்களில் #SayItLikeNirmalaTai எனும் ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. 

நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் நான் வெங்காயத்தை உண்பதில்லை, இதனால் மற்றவர்களையும் நான் வெங்காயம் சாப்பிட விடமாட்டேன் என கூறியதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் தகவல் பதிவிட்டு வருகின்றனர்.



இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வெங்காயம் பற்றி மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற விவாதத்தின் வீடியோ ஆய்வு செய்யப்பட்டது. அதில் 'நான் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகம் சாப்பிடமாட்டேன். ஆகையால் கவலையில்லை. வெங்காயம் ஒரு விஷயம் இல்லை என்ற நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து நான் வந்துள்ளேன்’ என தெரிவித்தார்.  

அந்த வகையில் நிர்மலா சீதாராமன் கூறியதாக தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என உறுதியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News