செய்திகள்
காங்கிரஸ்

பட்னாவிஸ் பதவி ஏற்பு விவகாரம் - ஜனாதிபதி, கவர்னருக்கு காங்கிரஸ் கேள்வி

Published On 2019-11-27 07:19 GMT   |   Update On 2019-11-27 12:07 GMT
மகாராஷ்டிராவில் எந்த அடிப்படையில் பட்னாவிசுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது என்று ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா பா. ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை முதல் -மந்திரி அஜீத் பவார் ஆகியோர் தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா  செய்தனர்.  பெரும்பான்மையை இன்று நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில் அவர்கள் பதவி விலகினார்கள்.

மெஜாரிட்டிக்கு போதுமான  உறுப்பினர்கள் இல்லாததால் இந்த  முடிவு மேற் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரி ஆகியோரை காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. எந்த அடிப்படையில் பட்னாவிசுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது என்று கேள்வி கேட்டுள்ளது. 



இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியதாவது:-

அரசியல் அமைப்பு தினத்தை அரசு கொண்டாடுகிறது. ஆனால் மகாராஷ்டிரா விவகாரத்தில் அரசியல்  அமைப்பு சிதைக்கப்பட்டு முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட விதம், கறுப்பு எழுத்துக்களில் பதிவு செய்யப்படும். அதிகாலை நேரத்தில் எந்த அடிப்படையில் பட்னாவிசுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

சனிக்கிழமை நடந்த நிகழ்வுகள் வெட்க கேடானது, கண்டனத்துக்குரியது. கவர்னரிடம் பா.ஜனதா கொடுத்த கடிதங்களை அவர் எவ்வாறு படித்து முடிவுகளை எடுத்தார். பட்னாவிஸ் சட்ட விரோதமாக பதவியேற்றதால் விலகினார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும்,  முன்னாள் முதல் மந்திரியுமான பிரித்விராஜ்  சவுகான் கூறும் போது, “மகாராஷ்டிரா மக்களிடம் பட்னாவிசும், அஜீத்பவாரும் மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்றார்.
Tags:    

Similar News