செய்திகள்
பிரதமர் மோடி

4 மாதத்தில் 9 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

Published On 2019-11-21 02:22 GMT   |   Update On 2019-11-21 02:22 GMT
கடந்த 4 மாதங்களில் 9 நாடுகளுக்கு பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி முரளதரன் எழுத்துபூர்வமாக விரிவாக பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு முதல் நவம்பர் மாதம் வரை 7 வெளிநாட்டு பயணம் மூலமாக பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், ரஷியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் டெக்சாஸ் இந்திய மன்றம் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி ஏற்பாடு செய்திருந்த மோடி நலமா? என்ற நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். இதில் அமெரிக்கவாழ் இந்தியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டெக்சாஸ் இந்திய மன்றத்துக்கு மத்திய அரசு நிதி உதவி எதுவும் வழங்கவில்லை.

இதேபோல கடந்த ஆகஸ்டு முதல் நவம்பர் மாதம் வரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 7 நாடுகளுக்கும், துணை ஜனாதிபதி 6 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 16 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி முரளதரன் 16 நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

மேலும் கடந்த 4 மாதங்களில் சீன அதிபர் ஜின்பிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட 14 தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News