செய்திகள்
பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரக தலைவரின் சகோதரர் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2019-11-19 09:52 GMT   |   Update On 2019-11-19 09:52 GMT
ஐக்கிய அரபு அமீரக தலைவரின் சகோதரர் ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானின் இறப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஐக்கிய அரபு அமீரக தலைவரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத்தின் சகோதரர், ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் நேற்று காலமானார். அவருக்கு வயது 63. அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

ஆட்சியாளரின் சகோதரர் மறைவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவதுடன், 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.



‘ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த தருணத்தில் பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்திற்காகவும் அமீரக மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News