செய்திகள்
சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிராவில் விரைவில் ஆட்சி அமைப்போம்- பாஜக திடீர் அறிவிப்பால் பரபரப்பு

Published On 2019-11-16 02:06 GMT   |   Update On 2019-11-16 02:06 GMT
மகாராஷ்டிராவில் விரைவில் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை :

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. குறைந்தபட்ச செயல்திட்டம், அதிகாரப்பகிர்வு என சிவசேனாவின் ஆட்சி அமைக்கும் நகர்வுகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்தநிலையில், மராட்டியத்தில் ஆட்சி அமைப்போம் என பாரதீய ஜனதா அதிரடியாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 1 கோடியே 42 லட்சம் வாக்குகள் கிடைத்தது. நாங்கள் தான் நம்பர் 1 ஆக இருக்கிறோம். சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து எங்களுக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

எனவே விரைவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும். ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.



1990-ம் ஆண்டுக்கு பின்னர் பாரதீய ஜனதாவை தவிர எந்த கட்சிகளும் 100 இடங்களை தாண்டியதில்லை. 164 தொகுதிகளில் போட்டியிட்டு 105 இடங்களில் வெற்றி பெற்றோம். 52 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சி அமைப்பதற்காக சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுடன் திரைமறைவில் பாரதீய ஜனதா பேசி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் ஆட்சி அமைப்போம் என்று அந்த கட்சி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது. பாரதீய ஜனதாவின் இந்த அறிவிப்பு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முயற்சித்து வரும் சிவசேனாவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News