செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சீன அதிபரை வரவேற்று பேனர்: ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி

Published On 2019-11-15 19:27 GMT   |   Update On 2019-11-15 19:27 GMT
சீன அதிபர் ஜின்பிங்கின் வரவேற்று பேனர் வைக்கப்பட்டதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி:

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி, அவரை வரவேற்று பேனர் வைக்க சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 3-ந் தேதி அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், “சீன அதிபர் இந்தியாவுக்கு வந்து திரும்பிச் சென்று விட்டார். மேலும் ஐகோர்ட்டு தீர்ப்பில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பேனர் வைக்க அனுமதி வழங்கியதாக கூறப்பட்டு உள்ளது. எனவே இந்த மனு பயனற்றதாகி விட்டது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News