செய்திகள்
பெண் தாசில்தார்கள் பாதுகாப்புக்கு மிளகு ஸ்பிரே

பெண் தாசில்தார்கள் பாதுகாப்புக்கு மிளகு ஸ்பிரே- அதிகாரிகள் சங்கம் யோசனை

Published On 2019-11-13 09:32 GMT   |   Update On 2019-11-13 11:41 GMT
பெண் தாசில்தார்தள் தங்கள் பாதுகாப்புக்காகவும், தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் மிளகு ஸ்பிரே எடுத்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லா புர்மெட் பகுதியில் விஜயாரெட்டி என்பவர் தாசில்தாராக பணியாற்றி வந்தார்.

கடந்த 4-ந் தேதி தாசில்தார் அலுவலகத்தில் விஜயாரெட்டி பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் என்பவர் விஜயாரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற அவரது டிரைவரும் தீயில் கருகி சிகிச்சை பலனின்றி இறந்தார். தீ வைத்த போது காயம் அடைந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலத்தில் 1000 தாசில்தார்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 400 பேர் பெண்கள் விஜயாரெட்டி கொலையால் அதிர்ச்சி அடைந்துள்ள பெண் தாசில்தார்கள் தற்போது தங்களது பாதுகாப்புக்காக அலுவலகங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 


இந்த நிலையில் பெண் தாசில்தார்தள் தங்கள் பாதுகாப்புக்காகவும், தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் ‘மிளகு ஸ்பிரே’ எடுத்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து துணை கலெக்டர்கள் சங்க தலைவர் லாச்சி ரெட்டி கூறியதாவது:-

விஜயா மீதான தாக்குதல் எதிர்பாராதது. இப்போது பெண் தாசில்தார்கள் எச்சரிக்கையாக இருக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இன்னும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிர்சில்லா நகரில் சமீபத்தில் ஒரு தாசில்தாரை சந்திக்க வந்த ஒருவர் பெட்ரோல் பாட்டிலை எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்த போது அவர் வீட்டுக்கு செல்லும் போது சிர்சில் லாவால் இருந்து எப்போதும் பெட்ரோல் வாங்கி செல்வதாக கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களால் அதிகாரிகளை அலுவலகங்களில் பார்க்க செல்லும் மக்கள் பல்வேறு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

Tags:    

Similar News