வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை இன்று தாக்கிய புல்புல் புயலை தொடர்ந்து மழைசார்ந்த விபத்துகளில் 11 பேர் உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.
வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது. இன்று பிற்பகல் வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்தில் புல்புல் புயல் கடந்து சென்றது.
இந்நிலையில், காற்றினால் மரம் முறிந்து விழுந்தும் மழையினால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தும் ஏற்பட்ட விபத்துகளில் வங்காளதேசத்தில் 4 பேரும் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் 7 பேரும் உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் மாநிலத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் மட்டும் 5 பேர்
உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.