செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

வழக்கறிஞர்கள், போலீசார் மோதல் விவகாரம் - உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Published On 2019-11-06 11:59 GMT   |   Update On 2019-11-06 11:59 GMT
டெல்லியின் டிஸ் ஹஸாரி கோர்ட்டில் நடைபெற்ற வழக்கறிஞர்கள், போலீசார் இடையிலான மோதல் விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியின் தெற்கு பகுதியில் டிஸ்ஹசாரி கோர்ட்டு உள்ளது. கடந்த 2-ம் தேதி இங்கு வாகனம் நிறுத்தம் தொடர்பாக போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமானது. இதில் 21 போலீசாரும், 8 வக்கீல்களும் காயம் அடைந்தனர். 14 மோட்டார் சைக்கிள்கள், போலீசாரின் கார் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டன. ஒரு வேனும் சேதமானது.

இதற்கிடையே, வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நேற்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நிராகரித்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரிய மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News