செய்திகள்
பாராளுமன்றம்

இந்திய அரசியலமைப்பு ஏற்கப்பட்டு 70 ஆண்டு ஆகிறது- 26ஆம் தேதி பாராளுமன்ற கூட்டுக் கூட்டம்

Published On 2019-11-06 10:31 GMT   |   Update On 2019-11-06 10:31 GMT
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் வரும் 26-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டத்தின் அசல் பிரதியானது, பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் வரும் 26-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இரு அவைகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவித், பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இரு அவைகளின் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் ஆகியோரும் பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலையில் தொடங்கும் இந்த கூட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News