செய்திகள்
கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகளுடன் போலீசார் பேட்டி

ரூ.6.4 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் - தெலுங்கானாவில் பறிமுதல்

Published On 2019-11-02 11:57 GMT   |   Update On 2019-11-02 11:57 GMT
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் 6.4 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை மாற்ற முயன்ற 5 பேரை கைது செய்தனர்.
ஐதராபாத்:

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிடப் போவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. ரிசர்வ் வங்கி நிறுத்தினாலும் சிலர் கள்ளநோட்டுகளை அச்சடித்து நாட்டின் பல பகுதிகளில் புழக்கத்தில் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கும்பல் 20 சதவீதம் கமிஷனுக்கு கள்ளநோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றுவதற்கான தரகு வேலையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அந்த கும்பலை இன்று சுற்றிவளைத்த போலீசார் 5 பேரை கைது செய்தனர். 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 320 கட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News