செய்திகள்
கையெறி குண்டு (கோப்பு படம்)

காஷ்மீர்: பஸ் நிறுத்தத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 19 பேர் காயம்

Published On 2019-10-28 12:06 GMT   |   Update On 2019-10-28 14:28 GMT
காஷ்மீரின் சோபோர் நகரில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பொதுமக்களில் 19 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு பின்னர், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு-காஷ்மீருக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரின் சோபோர் நகரில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பொதுமக்களில் 19 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் பலத்த காயமடைந்த 6 பேர் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். 
Tags:    

Similar News