செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் இத்தகைய வரவேற்பா?

Published On 2019-10-16 06:54 GMT   |   Update On 2019-10-16 06:54 GMT
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...



இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பொது மக்கள் ஆரவாரமாக வரவேற்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

உண்மையில் வைரல் வீடியோ 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகும். எடிட் செய்யப்பட்ட வீடியோவின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வைரல் வீடியோவில் பிரதமர் மோடி வீதிகளில் நடக்கும் காட்சிகளும், அவரை வரவேற்க பொதுமக்கள் சாலையோரத்தில் காத்திருந்து கையசைக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.



இதுதவிர வீடியோ பின்னணியில் தெலுங்கு பாடல் ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. வைரல் வீடியோவிற்கு, “தமிழ்நாட்டில் மோடியின் பிரபலத்தன்மையை சந்தேகிப்போர் இந்த வீடியோவை பார்க்க வேண்டும். மோடி தந்திரம் உங்களை ஆச்சரியப்படுத்தும்” என தலைப்பிடப்பட்டுள்ளது.

இதே வீடியோ ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடிக்கு தமிழகம் காட்டும் அன்பு என தலைப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. சார்பில் இயங்கும் மை ஃபர்ஸ்ட் வோட் ஃபார் மோடி எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு, பின் உடனே நீக்கப்பட்டுவிட்டது. 

தற்சமயம் வைரலாகும் வீடியோ டிசம்பர் 2017 இல் நடைபெற்ற குஜராத் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கை செலுத்த சென்ற போது எடுக்கப்பட்டதாகும். இந்த வீடியோ 2019 ஏப்ரல் மாதத்திலும் இதேபோன்று போலி தலைப்பில் ட்விட்டரில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News