செய்திகள்
இந்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல்

அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் எந்த பிரச்சினையும் இல்லை -பியூஷ் கோயல்

Published On 2019-10-15 09:49 GMT   |   Update On 2019-10-15 09:49 GMT
அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

புதுடெல்லியில் உள்ள இந்திய ஆற்றல் மன்றத்தில் வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-

அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அமெரிக்காவுடனான உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. எந்தவொரு உறவிலும் ஒரு சிறிய நிச்சயமற்ற தன்மை இருப்பது ஆரோக்கியமான இருதரப்பு உறவுக்கு நல்லது.

ஆனால், இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான பெரும் சாத்தியங்கள் உள்ளன. அதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

பொருளாதார மந்தநிலையை பொருத்தவரையில், இந்த கட்டமைப்பு மாற்றங்களுடன் இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட முடியும். கடந்த இரண்டு காலாண்டுகளைத் தவிர ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிதியாண்டில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News