செய்திகள்
பிரதமர் மோடி - ஜி ஜின்பிங்

இந்தியா-சீனா உறவுகளுக்கு சென்னை இணைப்பு உத்வேகத்தை சேர்க்கும்: மோடி பெருமிதம்

Published On 2019-10-12 08:35 GMT   |   Update On 2019-10-12 09:45 GMT
இந்தியா-சீனா உறவுகளுக்கு இந்த சென்னை இணைப்பு மேலும் உத்வேகத்தை சேர்க்கும் என சீன அதிபருடனான சந்திப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசினர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்.



இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘மாமல்லபுரத்தில் அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஆலோசனைகள் தொடர்கின்றன. இந்திய - சீன உறவினை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.

நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News