செய்திகள்
வானில் சாசகம் நிகழ்த்திய போர் விமானங்கள்

இந்திய விமானப்படை தினம்- ஹிண்டன் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் சாகசம்

Published On 2019-10-08 06:54 GMT   |   Update On 2019-10-08 06:54 GMT
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, ஹிண்டன் விமானப்படை தளத்தில் போர் விமானங்களின் கண்கவர் சாசக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஹிண்டன்:

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ‘விமானப்படை தினம்’ இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விமானப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, போர் விமானங்களின் சாசக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விங் கமாண்டர் அபிநந்தன், மிக்-21 ரக விமானத்தை இயக்கி சாசகம் செய்தார். இதுதவிர சினூக் ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து சாகசங்களை நிகழ்த்தின.

கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதன்பின்னர் 27-ந் தேதி, இந்திய பகுதிக்குள் வந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். 



இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள், இன்று நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் போர் விமானங்களின் சாசக நிகழ்ச்சிகளை ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் கண்டுகளித்தனர்.
Tags:    

Similar News