செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை இன்று உலகம் மரியாதையுடன் பார்க்கிறது - மோடி

Published On 2019-10-02 14:19 GMT   |   Update On 2019-10-02 14:19 GMT
உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை இன்று உலகம் மரியாதையுடன் பார்ப்பதாக தெரிவித்தார்.
அகமதாபாத்:

காந்தி ஜெயந்தி தினமான இன்று குஜராத் மாநிலத்தில் சபர்மதி நதிக்கரை ஓரத்தில் காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் நகருக்கு வந்தார்.

அகமதாபாத் விமான நிலையம் அருகே பாஜகவினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் மோடி இருக்கும் பிரமாண்ட பேனர்களும், கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன.



வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, 'உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று உலகம் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த சவால்களுக்கு எல்லாம் தீர்வாக மகாத்மா காந்தியின் போதனைகள் அமைந்துள்ளது.

உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நாம் தலைமையேற்க வேண்டும் என உலகம் எதிர்பார்க்கின்றது.

இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பும் வலிமையும் அதிகரித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை இன்று உலகம் மரியாதையுடன் பார்க்கிறது ’என தெரிவித்தார்.
Tags:    

Similar News