செய்திகள்
குங்குமப்பூ

காஷ்மீர் ‘குங்குமப்பூ’க்கு புவிசார் குறியீடு

Published On 2019-09-27 03:37 GMT   |   Update On 2019-09-27 03:37 GMT
காஷ்மீர் ‘குங்குமப்பூ’க்கு புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறது. இதனை கவர்னரின் ஆலோசகர் பாரூக் அகமத்கான் அறிவித்தார்.
ஸ்ரீநகர்:

நறுமணம் கொண்ட குங்குமப்பூ, உணவுக்கு சுவையூட்டவும், வண்ணம் சேர்க்கவும் உதவும். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் இவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகள் சிவப்பாக பிறக்கும் என்று காலம் காலமாக மக்களிடையே ஓர் நம்பிக்கையும் உண்டு.

அத்தகைய குங்குமப்பூவுக்கு தற்போது ஓர் உயரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. அதன்படி இது புவிசார் குறியீட்டை பெற்று இருக்கிறது. இதனை டெல்லியில் நடந்த பட்டுக்கூடு ஏலச் சந்தை திறப்பு விழாவின்போது கவர்னரின் ஆலோசகர் பாரூக் அகமத்கான் அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இதன் மூலம் காஷ்மீர் குங்குமப்பூவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து உள்ளது. காஷ்மீர் தயாரிப்புகளான பட்டு, வாதுமைப் பருப்புகள் (வால்நட்), பழங்கள் போன்றவைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவையும் நிறைவேறினால் காஷ்மீர் பொருட்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க உதவும்” என்றார்.
Tags:    

Similar News